ராகுல் எனக்கும் தலைவர்தான் அதிலென்ன சந்தேகம்? | தினகரன்

ராகுல் எனக்கும் தலைவர்தான் அதிலென்ன சந்தேகம்?

சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி எனக்கும் தலைவர்தான். இதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும் என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அவர் தலைவராக பொறுப்பேற்ற பொழுது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் அது பின்னர் அதிகாரபூர்வமாக மறுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சோனியாகாந்தி, ‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி எனக்கும் தலைவர்தான். இதில் எந்த சந்தேகமும் இருக்கவேண்டாம். அவருடன் இணைந்து பாஜகவைத் தோற்கடிப்போம். அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. கடினமான சூழலிலும் குஜராத் தேர்தலைச் சந்தித்து, அதில் நல்ல முடிவுகளைப் பெற்றோம். ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் காற்று திசைமாறி வீசுவதை உணர்த்தியிருக்கின்றன. கர்நாடக மாநிலத் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெறுவோம்’ என தெரிவித்துள்ளார். 


Add new comment

Or log in with...