சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்டுக்கள் கடத்திய குற்றச்சாட்டில் யாழில் இருவர் கைது | தினகரன்

சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்டுக்கள் கடத்திய குற்றச்சாட்டில் யாழில் இருவர் கைது

 

3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டில் யாழ். காங்கேசன்துறைக் கடற்பகுதியில் கடற்படையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், யாழ். மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி இரண்டு கோடி ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று (06) பிற்பகல் சந்தேகத்திற்கிடமான படகொன்று நடமாடுவதாக கடரப்படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த படகை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த படகில் இரு பொதிகளில் மறைத்து வைக்கப்ட்டிருந்த தலா 100 கிராம் கொண்ட 37 தங்க பிஸ்கட்டுகள் மீட்கபட்டுள்ளதுடன், குறித்த தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகள், சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட படகு என்பன யாழ். தெல்லிப்பழையிலுள்ள சுங்கத் திணைக்களத்தினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

(செல்வநாயகம் ரவிசாந்)

 


Add new comment

Or log in with...