உள்ளூராட்சி மன்ற தேர்தல்; அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (VIDEO) | தினகரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்; அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (VIDEO)

 

தேர்தல் தொடர்பான பல்வேறு தகவல்களையும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் பொதுமக்கள் குறுந்தகவல் சேவையூடாகவும் முறைப்பாடு செய்யமுடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் EC <இடைவெளி> EV <இடைவெளி> மாவட்டம் <இடைவெளி> "உங்கள் முறைப்பாடு" டைப் செய்து 

EC<space>EV<space>District<space>முறைப்பாடு

1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பிவைக்கலாம்.

இது தவிர அந்தந்த மாவட்டம் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பிவைக்கமுடியும்.

உதாரணமாக, திகாமடுல்ல மாவட்டமெனின் [email protected] எனும் மின்னஞ்சலுக்கு உரிய முறைப்பாட்டை அனுப்பிவைக்கலாம்.

அந்தந்த மாவட்டங்களின் ஈமெயில் விலாசங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

தேர்தல்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு பொதுமக்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் வேண்டப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

வாக்காளரின் ஆள் அடையாள ஆவணம்

தேர்தலில் வாக்களிக்கும் முறை

வாக்களிப்பு நிலையத்திற்குள் செல்ல தகுதியானோர்

முறைப்பாடுகளை பதிவு செய்ய

(காரைதீவு குறூப் நிருபர் சகா)
 


Add new comment

Or log in with...