கெப் ரக வாகனம் விபத்து; 43 வயது நபர் பலி | தினகரன்


கெப் ரக வாகனம் விபத்து; 43 வயது நபர் பலி

 

கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இரண்டு பேர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை தெல்பத்தை பகுதியில் நேற்று (04) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில், தெல்பத்தை பகுதியிலிருந்து பதுளை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கெப்ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் சாரதியோடு இரண்டு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் பலத்த காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் தெல்பத்தை பகுதியை சேர்ந்த 43 வயதான பிரேமசிறி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...