Friday, April 19, 2024
Home » யாழ். பழைய கச்சேரியை பார்வையிட்ட சீன தூதுவர் குழு

யாழ். பழைய கச்சேரியை பார்வையிட்ட சீன தூதுவர் குழு

by Prashahini
November 6, 2023 11:21 am 0 comment

யாழ்ப்பாணத்திற்கு இன்று (06) விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர்.

இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனதூதுவர் குறித்த கட்டட தொகுதியை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT