ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் இன்று (06) பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த எம்.எச்.எம். சல்மானின் இடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி எம்.எச்.எம். சல்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தருவதாக வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக குறித்த எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment