தேர்தல் பணி; பெப்ரவரி 09 இல் பாடசாலைகளுக்கு விடுமுறை | தினகரன்

தேர்தல் பணி; பெப்ரவரி 09 இல் பாடசாலைகளுக்கு விடுமுறை

 

நாளை முதல் 19 பாடசாலைகளுக்கும், இரு கல்வியற் கல்லூரிக்கும் விடுமுறை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பணிகள் தொடர்பில், அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்களிப்பு நடவடிக்கை தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த விடுமுறையை வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வாக்குப் பெட்டிகள் மற்றும் ஏனைய காகிதாதிகள் விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் கடமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகள் மற்றும் 02 கல்வியற் கல்லூரிகளுக்கு நாளை (07) புதன்கிழமை முதல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மற்றும் கல்வியயற் கல்லூரிகள் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, மீண்டும் திங்கட்கிழமை (12) திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (07) முதல் விசேட விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் (19) மற்றும் கல்வியற் கல்லூரிகள் (02)...

விநியோகம் மற்றும் ஏற்றுக்கொள்ளல் மத்திய நிலையங்கள்

  மாவட்டம்  பாடசாலைகள்
01. கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி
02. கொழும்பு றோயல் கல்லூரி
03. களுத்துறை ஞானோதய மகா வித்தியாலயம்
04. களுத்துறை புனித ஜோன் மகா வித்தியாலயம்
05. கண்டி ரணபிம றோயல் கல்லூரி
06. மாத்தளை சங்கமித்தா பெண்கள் கல்லூரி
07. நுவரெலியா காமினி தேசிய பாடசாலை
08. காலி சவுத்லேண்ட் பெண்கள் கல்லூரி
09. அ'தோட்டை சுச்சி தேசிய பாடசாலை
10. யாழ்ப்பாணம் மத்திய மகா வித்தியாலயம்
11. மட்டக்களப்பு இந்து கல்லூரி
12. திருகோணமலை விபுலானந்த மகா வித்தியாலயம்
13. குருணாகல் மலியதேவ பெண்கள் கல்லூரி
14. குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல
15. புத்தளம் ஹிந்து கல்லூரி
16. அநுராதபுரம் அநுராதபுரம் மத்திய கல்லூரி
17. பதுளை விகாரமகாதேவி பெண்கள் கல்லூரி
18. மொணராகலை றோயல் கல்லூரி
19. கேகாலை ஸ்வர்ண ஜயந்தி மத்திய மகா வித்தியாலயம்

பிரதான முடிவுகள் வழங்கும் மத்திய நிலையங்கள்

  மாவட்டம்  பாடசாலைகள்
01. காலி சவுத்லேண்ட் பெண்கள் கல்லூரி
02. அ'தோட்டை சுச்சி தேசிய பாடசாலை
03. யாழ்ப்பாணம் மத்திய மகா வித்தியாலயம்
04. மட்டக்களப்பு இந்து கல்லூரி

கல்வியற் கல்லூரிகள்

  மாவட்டம் விநியோகம் மற்றும் ஏற்றுக்கொள்ளல் மத்திய நிலையம் பிரதான முடிவுகள் வழங்கும் மத்திய நிலையம்
01. கம்பஹா பன்னல கெதர பன்னல கெதர
02. பொலன்னறுவை புலதிசி தேசிய கல்வியியற் கல்லூரி புலதிசி தேசிய கல்வியியற் கல்லூரி

 


Add new comment

Or log in with...