Thursday, March 28, 2024
Home » ஊடகவியலாளர் ஜெகனுக்கு கௌரவிப்பு

ஊடகவியலாளர் ஜெகனுக்கு கௌரவிப்பு

by damith
November 6, 2023 5:59 am 0 comment

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் நானாட்டான் பிரதேச செயலகம் மற்றும் நானாட்டான் பிரதேச கலாச்சாரப் பேரவை இணைந்து நடாத்திய பிரதேச பண்பாட்டு பெருவிழாவும் கலைஞர்கள் சமூக ஆர்வலர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வும் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமாரின் தலைமையில் வெள்ளிக் கிழமை (03) நடைபெற்றது

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளரும் கலை மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருபவரும் வளரும் ஊடகவியலாளர்களில் மக்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களால் போற்றப்படுபவருமான ஜெகன் என அழைக்கப்படும் சோலைமலை ஜெகதீஸ்வரன் ‘இளம் கலை மற்றும் சமூக ஆர்வலர்’ என்ற விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஊடகவியலாளர் ஜெகன் நானாட்டானில் முருங்கன் கிராமத்தில் பிறந்தவர். இவர் இற்றை வரை மக்கள் பிரச்சினைகளை ஊடகத்தினூடாகவும் குறும்படங்கள் மூலமாகவும் உலகறியச் செய்பவர்.

இவரது படைப்புக்களாக 2012 ஆம் ஆண்டு உலக ஆரம்பமும் மன்னார் மாவட்டமும் எனும் வரலாற்று ஆய்வு நூலினை வெளியிட்டுள்ளார்.

2019 இல் விதவைகளின் மறுமணத்திற்கு ஆதரவு தெரிவித்து ‘இது என்ன மாயம்’ இவ்வாறான மன்னார் மாவட்டத்தில் வளரும் இளம் ஊடகவியாளர்களில் மிகவும் நேர்மையும் உண்மையும் கலை ஆர்வமும் சமூகப் பணியும் கொண்ட ஜெகனுக்கு நானாட்டான் பிரதேச செயலகம் மற்றும் நானாட்டான் பிரதேச கலாச்சாரப் பேரவை இணைந்து ‘இளம் கலை மற்றும் சமூக ஆர்வலர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

(தலைமன்னார் விஷேட நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT