தேர்தல் வாக்களிப்பு; கண்காணிப்பு, வாக்கெண்ண பயிற்சி | தினகரன்


தேர்தல் வாக்களிப்பு; கண்காணிப்பு, வாக்கெண்ண பயிற்சி

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பங்குபற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் கிண்ணியா பிரதேசத்தில் இருந்து சிரேஷ்ட தலமை தாங்கும் அலுவலர்ககளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான செயலமர்வு இன்று (29) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சஜித் வெல்கம தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில், வாக்களிப்பு நிலையங்களை தயார்படுத்தல் மற்றும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சிமன்றங்களுக்கு 220 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக, 2,368 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதற்காக 23 அரசியல் கட்சிகளும் 08 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 272,822 பேர் இம்முறை வாக்களித்த தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(கிண்ணியா மத்திய நிருபர் - கியாஸ்)

 


Add new comment

Or log in with...