அம்பகமுவவை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி | தினகரன்


அம்பகமுவவை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

 

அம்பகமுவ பிரதேச சபையை 3 ஆக பிரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு, உச்ச நீதிமன்றத்தில் சிசிர டி அப்ரு, கே.டி. சித்ரசிறி, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று (29) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அது தள்ளுபடி செய்யப்பட்டது.

அம்பகமுவ பிரதேச சபை, அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய மூன்று சபைகளாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் பிரிக்கப்பட்டது.

இவ்வாறு பிரிக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளாக தெரிவித்து, முன்னாள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஹெலபிரிய நந்தராஜவினால் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...