பெப்ரவரி 15 வரை இடையூறு வேண்டாம் | தினகரன்

பெப்ரவரி 15 வரை இடையூறு வேண்டாம்

 

குறைந்தபட்சம் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையாவது, இடையூறாக செயற்பட வேண்டாம் என, தேர்தல்கள் ஆணையகம் வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பை எவ்வித பிரச்சினைகளும் இன்றி மேற்கொள்ளும் பொருட்டு குறித்த வேண்டுகோளை விடுப்பதாக, தேர்தல்கள் ஆணையகம் இன்று (28) வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் குறித்த கோரிக்கையை முன்வைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தல் விடுத்துள்ளார்.

 


Add new comment

Or log in with...