288 வாக்காளர் அட்டைகளுடன் தபால்காரருடன் மற்றொருவர் கைது | தினகரன்

288 வாக்காளர் அட்டைகளுடன் தபால்காரருடன் மற்றொருவர் கைது

 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் வாக்களிப்பு அட்டைகள் 288 உடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (25) நண்பகல் அளவில், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குறித்த வீட்டிலிருந்து 288 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேராவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த வீட்டின் உரிமையாளரும் (58) விஷ்வமடு பிரதேசத்தைச் சேர்ந்த தபால்காரர் (40) ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...