இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு | தினகரன்


இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு

 

எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுகிறது.

கடந்த திங்கட்கிழமை (22) இடம்பெற்ற முதலாம் கட்ட தபால் மூல வாக்களிப்பில் தேர்தல் அலுவலக ஊழியர்களும், பொலிஸ் ஊழியர்களும் வாக்களித்தனர்.

அதனை அடுத்து இன்றும் (25) நாளையும் (26) இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் ஏனைய அரச அலுவலகங்கள், திணைக்களங்களின் ஊழியர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதற்கிணங்க தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கல்வித்துறை சார்ந்தவர்கள், போக்குவரத்து ஊழியர்கள், பிரதேச சபை ஊழியர்கள் உள்ளிட்ட அரச பணியாளர்கள் இன்று வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் அம்பகமுவ பிரதேச செயலக காரியாலயத்தில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த தபால் மூல வாக்களிப்பில் அம்பகமுவ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 150 பேர் வாக்களித்தனர்.

நாடு முழுவதும் 5 இலட்சத்து 60,536 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

குறித்த இரு கட்டங்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் மற்றும் 02 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அலுவலக நேரங்களில் குறித்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் செயலகத்திலும் அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...