ஊவா மாகாண சபை முதலமைச்சரை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம் | தினகரன்

ஊவா மாகாண சபை முதலமைச்சரை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

 

ஊவா மாகாண சபையின் முன்னால் கலகத் தடுப்பு பொலிசார்

பதுளை தமிழ் பெண்கள் மகா வித்தியாலயத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பாடசாலையின் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில், ஊவா மாகாண சபை முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாடசாலை மூடப்பட்டுள்ளதோடு, பாடசாலையின் ஆசிரியர்கள, ஊழியர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (22) காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் மாகாண அரசாங்க ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.

பாடசாலையின் முன்னால் ஒன்றுகூடியுள்ள ஆர்ப்பாட்டாக்காரர்கள், முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, அவரது செயலாளர் சந்த்யா அம்பன்வல, கல்வி பணிப்பாளர், ரத்னாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு
வலியுறுத்துகின்றனர்.

பள்ளேகடுவ நிவ்பர் தோட்ட மக்கள் பதுளை மகளீர் மகா வித்தியாலய அதிபரை ஊவாமாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

இதேவேளை, ஊவா மாகாண சபையின் முன்னால் கலகத் தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...