மலர் மொட்டு கட்சியின் உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி (UPDATE) | தினகரன்

மலர் மொட்டு கட்சியின் உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி (UPDATE)

 

பொதுஜன பெரமுண கட்சியினால் வெலிகம பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு, விசாரணைக்குட்படுத்தாமலேயே உச்சநீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், பாணந்துறை, அகலவத்தை, மஹியங்கணை, திறப்பனை ஆகிய சபைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு அணியான மலர் மொட்டு கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுக்களை, மன்று இன்று (23) தள்ளுபடி செய்தது.

 


Add new comment

Or log in with...