இன்னும் ஒரு போட்டியில் வெல்ல வேண்டிய நிலையில் இலங்கை | தினகரன்

இன்னும் ஒரு போட்டியில் வெல்ல வேண்டிய நிலையில் இலங்கை

 

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் முக்கோண கிரிக்கெட் தொடரின் நேற்று (21) இடம்பெற்ற நான்காவது போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் சிம்பாப்வே அணியை வெற்றி கொண்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 44 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அவ்வணி சார்பில் பிரண்டன் டெய்லர் ஆகக் கூடுதலாக 58 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் திசர பெரேரா 8 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 202 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. அந்த வகையில் இலங்கை அணி இத்தொடரின் முதலாவது வெற்றியை இப்போட்டியில் பதிவு செய்தது.

இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 49 ஓட்டங்களையும், திசர பெரேரா 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

ஒவ்வொரு அணியும் மற்றைய இரு அணிகளுடனும் தலா இரு போட்டிகளில் (4 போட்டிகள்) விளையாடவுள்ள இத்தொடரில் பங்களாதேஷ் அணி, தாங்கள் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை வகிக்கின்றது.

இத்தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுளைவதற்கு சிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகள் எஞ்சியுள்ள ஒரு போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டும் எனும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...