4th ODI: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம் | தினகரன்

4th ODI: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம்

 

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் முக்கோண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி, இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இன்றைய (21) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற இரு போட்டிகளிலும் இலங்கை அணி, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளிடம் தோல்வியுற்றுள்ள நிலையில் குறித்த போட்டி தீர்க்கமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணி சார்பில் கடந்த போட்டியில் விளையாடிய அணியில் வணிந்து ஹசரங்கவிற்கு பதிலாக லக்‌ஷான் சந்தகன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

சிம்பாப்வே அணியில் எந்தவித மாற்றுமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை சிம்பாப்வே அணி 26 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 


Add new comment

Or log in with...