மேர்வின் சில்வாவின் மகன் மாலகவிற்கு பிடியாணை | தினகரன்

மேர்வின் சில்வாவின் மகன் மாலகவிற்கு பிடியாணை

 

வழக்கு நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவிற்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியர் ஒருவரையும் அவரது காதலியையும் தாக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை, இன்று (18) கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா விமலசிறி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாலக சில்வா அங்கு ஆஜராகியிருக்கவில்லை.

இதனையடுத்து, அவரை கைது செய்து எதிர்வரும் மார்ச் 06 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

2014 டிசம்பர் மாதம், கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள கழகம் ஒன்றில் வைத்து, பிரித்தானியர் ஒருவரையும் அவரது காதலியையும் தாக்கியதாக தெரிவித்து, மாலக சில்வா மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

 


Add new comment

Or log in with...