பருத்தித்துறை கடற்பரப்பில் ஒதுங்கிய மூங்கில் படகு | தினகரன்

பருத்தித்துறை கடற்பரப்பில் ஒதுங்கிய மூங்கில் படகு

 

பருத்தித்துறை சுப்பர் மடம் கடற்கரையில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மூங்கில் மரங்களால் கட்டப்பட்ட மீன்பிடி படகு ஒன்று கரை ஒதுங்கியது.

வீடு போல் அமைந்திருந்திருந்த இப்படகை பெருந்தொகையான மக்கள் பார்த்து வருகின்றனர். இப்படகு இந்தோனேசியா (பர்மா) அல்லது தாய்வான் போன்ற ஏதாவது நாட்டில் இருந்து இங்கு கரை ஒதுங்கி இருக்கலாம் என கருதப்படுகின்றது.

கடந்த எழுபதாம் ஆண்டு காலப்பகுதியில் இது போன்ற மூங்கில் படகுகள் இதே காலப்பகுதிகளில் வடமராட்சி கடற்பிரதேசத்தில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நீண்ட கால இடவெளிக்கு பின்னர் இவ்வாறான மூங்கில் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வடமராட்சி பிரதேசத்தில் இவ்வாறானதொரு மூங்கில் படகொன்று கரைஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கரவெட்டி தினகரன் நிருபர்)

 


Add new comment

Or log in with...