8 மணி நேர போராட்டத்தின் மீட்கப்பட்ட நபர் மரணம் (UPDATE) | தினகரன்

8 மணி நேர போராட்டத்தின் மீட்கப்பட்ட நபர் மரணம் (UPDATE)

 
மாத்தளை, லக்கல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட களுகங்கை அபிவிருத்தித் திட்ட பணிகளின் போது, சரிந்து வீழ்ந்த மணல் மேட்டில் சிக்கிய நபர், இராணுவம், மற்றும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட, சுமார் 8 மணி நேர போராட்டத்தின் பின், மீட்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
 

 

களுகங்கை திட்ட மணல் மேட்டில் சிக்கிய நபர் மீட்பு (UPDATE)

 
களுகங்கை திட்டத்திற்கான பாறை அகழ்வு நடவடிக்கைகளின் போது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிக்கிய நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
 
சுமார் 8 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வரை உயிருக்காக போராடிய நிலையில் குறித்த நபர் மீட்கப்பட்டுள்ளதோடு, தற்போது தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

 

மணல் மேட்டினுள் சிக்கிய நபரை மீட்கும் பணியில் இராணுவம்

 
களுகங்கை அபிவிருத்தி திட்டத்திற்கான பாறை அகழ்வு நடவடிக்கைகளின் போது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிருடன் சிக்கியுள்ளார்.
 
உயிருக்கு போராடி வரும் குறித்த நபருக்கு, மருத்துவ குழு ஒன்றின் உதவியுடன் செயற்கைச் சுவாசம் வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
 
மாத்தளை, லக்கல பகுதியில் இன்று (26) குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த மணல்மேட்டினுள் சிக்கிய நபரை மீட்கும் பணியில், இரு இராணுவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த குழுக்கள், ஹெலிகாப்டர்கள் இரண்டின் மூலம் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
 
இதேவேளை இன்னும், இரண்டு மணித்தியாலங்களுக்குள் குறித்த நபரை மீட்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
(படங்கள் : காஞ்சன ஆரியதாஸ)
 
 

Add new comment

Or log in with...