ஒப்சேவர்- மொபிடெல், பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டியைப் பாராட்டி மகிழும் வெற்றி வீரர்கள் | தினகரன்

ஒப்சேவர்- மொபிடெல், பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டியைப் பாராட்டி மகிழும் வெற்றி வீரர்கள்

இன்னும் இரண்டு மாத காலத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், அனைத்து பாடசாலைகளுக்கிடையேயான முதலாம் தவணைக்கான முககியமான போட்டிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

அதேநேரத்தில், வருடத்திற்கான ஒப்சேவர் -மொபிடெல் பாடசாலை கிரி்க்கெட் 2018- போட்டிகள், தத்தம் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் பல்லாயிரக் கணக்கான பாடசாலைச் சிறுவர்களைக் கவர்ந்துள்ளது.

மேற்படி போட்டியானது, பிளாட்டினம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் நடாத்தப்பட்டு வருகின்றது. பிரதான முதலாம் தவணைப் போட்டிகளில் தத்தம் பாடசாலைகளிலிருந்து பிரகாசிக்கும் நட்சத்திர வீரர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் சரளமாக ஆதரவளித்துவரும் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. வருடத்திற்கான ஒப்சேவர்- மொபிடெல் மிகவும் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர் மாபெரும் போட்டியில் விருதொன்றை வென்றெடுப்பதானது எந்தவொரு பாடசாலைச் சிறுவனுக்கும் ஓர் ஆயுட்கால அனுபவமாகும். இத்தகைய வசீகரமான போட்டியில் கிடைக்கப்பெறும் அங்கீகாரம் வெறும் பாராட்டாக மட்டும் இருக்கலாம். அவர்களை எதிர்கால இலங்கை வீரர்களாக உயர்த்திடவும் வழிசமைக்கவுள்ளது. அதனாலேயே இதற்கு முன்னர், இத்தகைய விருதுகளை வென்றெடுத்திருந்த வீரர்கள் பலர்.

“மேற்படி மாபெரும் போடடியையும் கடந்த நான்கு தசாப்த காலமாக பாடசாலை கிரிக்கெட் போட்டியை போஷித்து வருவதில் ‘சண்டே ஒப்சேவர்” பத்திரிகையின் வகிபாகத்தையும் பாராட்டி மகிழ்கின்றனர்.

பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதுகளை ஏற்கனவே வென்றெடுத்துள்ள பிரபல கிரிக்கெட் வீ;ரரர்கள், இத்தகைய விருதுகள் தமது வாழ்க்கையில் அதிகளவு மறக்க முடியாதவர்களாக இருந்ததாகவும், பெரும் (லீக்) போடடிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புக்களை வாரி வழங்கியிருந்ததாகவும் உணர்கின்றனர்.

கடந்த 1978/ 1979 காலங்களில் ஆரம்பமான மேற்படி போட்டியானது, சர்வதேச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முத்திரை பதித்துள்ள வீரர்கள் பலரை உருவாக்கியுள்ளது.

அத்தகையோரில் உலகியேயே அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவரான முத்தையா முரளிதரன், உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல ஆகியோர் அனைத்துப் போட்டிகளினதும் தாய்ப் போட்டியாக விளங்கும் ஒப்சேவர்- மொபிடெல் அதிகம் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டியின் வகிபாகம் குறித்த தமது பாராட்டுக்களை இதற்கு முன்னர் குறித்த விருதுகளை தமதாக்கிக் கொண்ட வீரர்கள் அண்மையில் இடம்பெற்ற தமது நேர்காணல்களின் போது தெரிவித்துள்ளனர்.

மேற்படி போட்டியில் முதன்முதலாக விருதை வென்றிருந்த முன்னாள் றோயல் கல்லூரி அணி, என்.சி. சி. மற்றும் இலங்கை அணித் தலைவர் ரஞ்சன் மடுகல்ல தெரிவிக்கையில், இத்தனை வருடகாலமாக தொடர்ச்சியான முறையில் இந்தப் போட்டியை நடாத்தி வருவதற்காக லேக் ஹவுஸ் நிறுவனமும் ‘சண்டே ஒப்சேவர்’ பத்திரிகையும் பாராட்டப்பட வேண்டியவையாகும்.

போட்டியைத் தொடர்ந்து நடாத்துவதற்கு அனுசரணையாளர்கள் அத்தியாவசியமாகும். கடந்த காலங்களில், உயர் விருதுகளை வென்றெடுத்தோர் கொழும்பையும் அதன் சுற்றுப் புறங்களையும் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ஆயினும, இப்போதெல்லாம், வெளிமாவட்ட பாடசாலைகள் பெரியளவில் விருதுகளைப் பெற்று வருகின்றமை சாதகமான அறிகுறியாகும். குறித்த போட்டி தொடர்ந்தும் பல்லாண்டுகள் நடாத்தப்பட வாழ்த்துகள்.

மேற்படி போட்டிகளில் 1980 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் விருதுகள் வென்றவரும் உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியின் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, இது பற்றிக் கருத்து வெளியிடுகையில் பாடசாலை சிறுவர் கிரிக்கெட் வீரர் விருதை வெல்வதே எந்தவொரு பாடசாலை சிறுவனுக்கும் கனவாகும எனத் தெரிவித்தார்.

கடந்த 1988 இல் மேற்படி போட்டியில் சிறந்த வீரருக்கான விருதைத் தனதாக்கிக் கொண்டவரும், கடந்த 1996 இல் உவலகக் கிண்ணத்தைவென்ற இலங்கை அணியின் ஆட்ட (தொடர்) நாயகனுமான சனத் ஜெயசூரிய இதுபற்றிக் கூறுகையில்-

“அந்த விருதை வென்ற கணத்தில் எனக்கு ஏற்பட்ட ஆனந்த உணர்வை வார்த்தைகளில் வடிப்பது கடினமானதாகும். நான் மட்டுமல்ல, எனது பெற்றோர், சகோதரர், உறவினர்கள், பயிற்றுனர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் அதனை அனுபவித்தனர் என்றார்.

மேலும் முன்னாள் நாளந்தா கல்லூரி அணித்தலைவரும், இலங்கை அணி வீரரும் தற்போதைய தேசிய அணியின் முகாமையாளருமான அசங்க குருசிங்க தனது கருத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

“எனது பாடசாலையிலிருந்து ரொஷான் மகாநாம இந்த விருதினை கடந்த 1983 மற்றும் 1984ஆம ஆண்டுகளில் வென்றெடுத்த போது, இந்த விருதைப் பெறுவதென்பது எவ்வளவு மகத்தானதென்பதை நான் உணர்ந்தே, கடந்த 1985இல் அதனை எனதாக்கிக் கொண்டேன் எனக் குறிப்பிடுகிறார்.

நாலந்தாவின் முன்னாள் தலைவரும் மேற்படி போட்டிக்கான விருதினை கடந்த 1989 இல் வென்றெடுத்தவருமான குமார் தர்மசேன இது குரித்து கருத்துத் வெளியிடுகையில்-

கிரிக்கெட் வீரர் என்ற வகையில் அது எனக்கு ஆனந்தக் கிளர்ச்சியை ஏற்படுத்திய கணங்களுள் ஒன்றாகும். அது எனது பெரிய அபிலாஷையாகவும் இருந்ததுடன், இலங்கைக்காக என்னை விளையாடத் தூண்டியும் விட்டிருந்தது.

கடந்த 1990 இல் மேற்படி போடிடக்கான வருதுனை வென்றவரும், இலங்கை அணியின் முன்னாள் வீரருமான மாவன் அத்தபத்து கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி விருது இலங்கை அணிக்காக விளையாடுவதற்கான சான்றுப்பத்திரமாக அல்லது உத்தரவாதமாகவே நான் கருதுகின்றேன். நான் ஆனந்தாக் கல்லூரிக்காக திறமையாக விளையாடி ஓட்டங்களைக் குவித்திருந்த போது அநேகமானோர் என்னை இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் வீரராகவே பார்த்தனர்” எனக் குறிப்பிட்டார்.

மேற்படி சிறந்த வீரருக்கான விருதுனை கடந்த 2012 இல் வென்றெடுத்த நிரோஷன் டிக்வெல்ல

“இந்தப் போட்டியின் மூலமே நான் சர்வதேச அரசங்கில் காலடி பதித்தேன்.” என பெருமையுடன் கூறியுள்ளார்.

தேசிய தொலைபேசி சேவை வழங்குநரான ஸ்ரீலங்கா டெலிகொம் பொபிடெல் மேற்படி போட்டிக்கென ஸ்மார்ட், இணைப்பை வழங்கிவருவதும், போட்டிகக்கான கூப்பன்கள் “சண்டே -ஒப்சேவர், டெய்லிநியூஸ், தினமின, மற்றும் தினகரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...