உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் | தினகரன்

உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட்

உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி, சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் அமைந்துள்ள அழகான பகுதி செயின்ட் மோரிட்ஸ் ரிசார்ட். கடல் மட்டத்தில் இருந்து 5910 அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் வித்தியாசமான முயற்சியாக பனிக்கட்டி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு ரி 20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி) அனுமதி அளித்துள்ளது.

டைமண்ட்ஸ் மற்றும் ராயல்ஸ் என்ற இரண்டு அணிகள் மோத உள்ள, இந்த ஐஸ் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் விருப்பம் தெரிவித்து பெயர்களை பதிவு செய்துள்ளனர். ரோயல்ஸ் அணியில் ஸ்மித், சோயிப் அக்தர், பிராவோ, அப்துல் ரசாக், மேட் பிரையர், நாதன் மெகல்லம், டேனியல் வெட்டோரி, கிராண்ட் எலியட், சஹிட் அப்ரிடி, ஒவாயிஸ் ஷா போன்ற வீரர்கள் உள்ளனர். டைமண்ட்ஸ் அணியில் சேவாக், சஹீர் கான், அஜித் அகர்கர், ஜயவர்தன, டில்சன், மலிங்க, மைக்கல் ஹசி, முகமது கயிப் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற உள்ளனர்.

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய வீரர்கள் பனிக்கட்டி மைதானத்தில் பந்துகளை பறக்க விட உள்ளனர். இதனால் ஐஸ் கிரிக்கெட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Add new comment

Or log in with...