மெஸ்சியின் பெனால்டி மிஸ்சிங்கால் பாசிலோனாவின் தொடர் வெற்றி பறிபோனது | தினகரன்

மெஸ்சியின் பெனால்டி மிஸ்சிங்கால் பாசிலோனாவின் தொடர் வெற்றி பறிபோனது

பெனால்டி வாய்ப்பை மெஸ்சி கோட்டை விட்டதால் பார்சிலோனாவின் தொடர் வெற்றி பறிபோகியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் ‘லா லிகா’ கால்பந்து தொடரில் பாசிலோனா தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. மெஸ்சி, சுவாரஸ் ஆகியோரின் அந்த அணிக்கு தொடர்ந்து வெற்றியை குவித்து வருகிறார்கள்.

இந்த பருவகாலத்தில் பாசிலோனா 29 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் வீறுநடை போட்டி வந்தது. இந்நிலையில் கோபா டெல் ரே ஸ்பெயின் சூப்பர் கோப்பை தொடரின் காலிறுதி முதல் லெக்கில் பாசிலோனா, எஸ்பான்யல் அணியை எதிர்கொண்டது.

எஸ்பான்யல் அணி சொந்த மைதானத்தில் பாசிலோனாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 62-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடிக்க தவறிவிட்டார்.

பின்னர் 88-வது நிமிடத்தில் எஸ்பான்யல் ஒரு கோல் அடித்தது. இதனால் பாசிலோனா 0-1 என தோல்வியடைந்தது.

தொடர்ந்து 29 வெற்றிகளை பெற்று வந்த பாசிலோனா, மெஸ்சியின் பெனால்டி வாய்ப்பு சொதப்பலால் தடைபட்டது.

பாசிலோனா 2016-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்கெதிராக 0-2 என தோல்வியை சந்தித்திருந்தது. அதன்பின் தற்போதுதான் தோல்வியை சந்தித்துள்ளது. 29 போட்டிகளில் 23 வெற்றிகளை ருசித்துள்ளது. 


Add new comment

Or log in with...