மருத்துவ பரிசோதனையில் தேறிய டொனால்ட் டிரம்ப் | தினகரன்

மருத்துவ பரிசோதனையில் தேறிய டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப் மீதான அறிவாற்றல் சோதனையில் அவரிடம் எந்த அசாதாரண அறிகுறிகளையும் காணவில்லை என்றும் அவர் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவரது வெள்ளை மாளிகை மருத்துவர் ரொன்னி ஜக்சன் குறிப்பிட்டுள்ளார்.

“அவரது அறிவாற்றல் திறன் மற்றும் நரம்பியல் செயற்பாடுகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை” என்று ஜக்சன் செவ்வாய்கிழமை அறிவித்தார்.

71 வயதான டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியான பின் கடந்த வாரம் முதல் முறை முன்று மணிநேர மருத்துவ சோதனைக்கு உட்பட்டார். அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய புத்தகம் ஒன்று டிரம்பின் மனநிலை குறித்து கேள்வி எழுப்பி இருந்த நிலையிலேயே இந்த மருத்துவ சோதனை இடம்பெற்றது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த டொக்டர் ஜக்சன், ஜனாதிபதியின் ஒட்டுமொத்த உடல்நிலை சிறப்பாக உள்ளது என்றார்.

“அனைத்து தரவுகளும் ஜனாதிபதி உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை காட்டுகிறது. அவர் தனது ஜனாதிபதி காலத்தில் தொடர்ந்து நீடிப்பார்” என்றார். 


Add new comment

Or log in with...