மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் சுட்டுக்கொலை | தினகரன்

மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் சுட்டுக்கொலை

மியன்மாரின் பதற்றம் கொண்ட ரகைன் மாநிலத்தில் பெளத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ம்ரெளகு யூ என்ற நகரில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற பண்டைய அரகான் இராச்சியத்தின் வீழ்ச்சியை நினைவுகூரும் தடைசெய்யப்பட்ட நிகழ்வில் 4000க்கும் அதிகமான ரகைன் பெளத்தர்கள் பங்கேற்றுள்ளனர். காயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் பல இனக்குழுக்கள் இருப்பதோடு சில குழுக்கள் அரசுடன் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. ம்ரெளகு யூ பண்டைய அரகான் இராச்சியத்தின் வரலாற்று தலைநகராகும். 200 ஆண்டுகளுக்கு முன் மியன்மார் இராணுவம் இந்த இராச்சியத்தை ஆக்கிரமித்தது ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது.

இந்நிகழ்வுக்கு இந்த ஆண்டு அரசு தடை விதித்த நிலையில் அரச கட்டடத்திற்கு முன்னால் அதிக எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டனர். இவர்கள் மீதே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 


Add new comment

Or log in with...