2017 அகில இலங்கை தாம் கிண்ணத்தை சுவீகரித்தார் கிரிஷான்த குமாரகே | தினகரன்

2017 அகில இலங்கை தாம் கிண்ணத்தை சுவீகரித்தார் கிரிஷான்த குமாரகே

கொழும்பு கோட்டை இளம் கிறிஸ்தவ சங்கத்தினால் இம்முறை நடாத்தப்பட்ட 2017 அகில இலங்கை தாம் போட்டியில் கிரிஷாந்த குமாரகே வெற்றியீட்டியுள்ளார்.

53 வீரர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு ஸ்ரீ கான்த், வீத்தியன், மெல்டஸ், ரம்யா குணசேகர, ஷெல்டன் பிரனாந்து ஆகிய ஐந்து வீரர்கள் தெரிவானதுடன், அவர்களுடன் போட்டியிட்டு கிரிஷாந்த குமாரகே வெற்றியீட்டியுள்ளார்.

இறுதிப்போட்டியில் ஷெல்டன் பிரனாந்து, வீத்தியன், மெல்டஸ் மற்றும் கிரிஷாந்த குமாரகே ஆகியுயோர் போட்டியிட்டனர். இம்மூன்று வீரர்களையும் தோழ்வியடைச்செய்து கிரிஷாந்த குமாரகே வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டார்.

1996இல் ஸ்ரீ கான்த், கிரிஷ்னமூரத்தி ஆகியோரை தோற்கடித்து வெற்றியீட்டிய கிரிஷாந்த குமாரகே 1996ஆம் ஆண்டு முதல் பல வருடங்களாக தாம் போட்டியில் கிண்ணத்தை சுவீகரித்து வந்துள்ளார். இந்நிலையில் 2017ஆம் ஆண்டு தாம் போட்டியிலும் கிரிஷாந்த குமாரகே கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை விஷேட அம்சமாக உள்ளது.

கடந்த 27ஆம் திகதி இளம் கிறிஸ்தவ சங்கம் கிரிஷாந்த குமாரகேவுக்கு கிண்ணத்தை வழங்கி வைத்தது. 


Add new comment

Or log in with...