ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது இலங்கை | தினகரன்

ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது இலங்கை

19வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடருக்கான 12வது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியிடம் இலங்கை அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 32 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. (புதன்கிழமை) வேங்கரெய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக இப்ராயிம் சத்ரான் 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் திசரு ரேஷ்மிக, நிபுன் மாலிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 285 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கவிருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டது. இதனால் 38 ஓவர்களுக்கு 235 ஓட்டங்கள் என மட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 236 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 37.3 ஓவர்கள் நிறைவில் 202 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 32 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஜிஹான் டேனியல் 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இப்ராஹிம் சத்ரான் தெரிவுசெய்யப்பட்டார். 


Add new comment

Or log in with...