நாடு முழுவதும் சுற்றிவளைப்பு; பலர் கைது; பலர் மீது வழக்கு | தினகரன்

நாடு முழுவதும் சுற்றிவளைப்பு; பலர் கைது; பலர் மீது வழக்கு

 

நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் கட்டுப்பாட்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு அமைய நேற்று (16) இரவு 10.00 மணி முதல் இன்று (17) அதிகாலை 2.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையின் பிரதிபலன் வருமாறு:

  • விச மதுபானம், சட்ட விரோத மதுபான சுற்றி வளைப்பு - 762

- ஹெரோயின் கைப்பற்றல் - 40 கிராம் 334 மி.கிராம்
- கஞ்சா கைப்பற்றல் - 14 கிலோ 990 கிராம்
- சட்ட விரோத மதுபானம் - 1,738 லீட்டர்
- வேறு மதுபானம் - 6,491 லீட்டர்

  • போக்குவரத்து வழக்குகள் - 5,298
  • மதுபோதையில் வாகனம் செலுத்தியோர் கைது - 802
  • பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் கைது - 666
  • பல்வேறு குற்றங்கள் தொடர்பான சந்தேகநபர்கள் கைது - 695
  • பல்வேறு குற்றங்கள் தெடர்பில் தேடப்படுவோர் கைது - 89ஷ
  • சட்டவிரோத ஆயுதம் பறிமுதல் - 02
  • போதையில் முறையற்று நடத்தல், மண் மற்றும் மர கடத்தல் வழக்கு - 81

 


Add new comment

Or log in with...