LTTE இலச்சினையுடன் வாழ்த்து அனுப்பிய இருவருக்கு விளக்கமறியல் | தினகரன்

LTTE இலச்சினையுடன் வாழ்த்து அனுப்பிய இருவருக்கு விளக்கமறியல்

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உருவப்படம் மற்றும் LTTE அமைப்பின் இலச்சினை உடனான வாழ்த்து செய்தியை பேஸ்புக்கில் வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைதான இருவருக்கும் ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்க்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள், கொழும்பு மேலதிக நீதவான் தனூஜா லக்மாலி ஜயசிங்க முன்னிலையில் குறித்த இருவரும் இன்று (17) ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...