ரூ. 5 கோடி பெறுமதி; 70 தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது | தினகரன்

ரூ. 5 கோடி பெறுமதி; 70 தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது


யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (17) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்படவிருந்த நிலையில் குறித்த தங்கபிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்திச் செல்வதற்குத் தயாராகவிருந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காங்கேசன்துறைக் கடலில் கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட வெற்று உரப்பைகளிலிருந்து குறித்த தங்க பிஸ்கட்டுகளைத் தாம் மீட்டுள்ளதாக யாழ். பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் ஆர். ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஐந்து கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களை யாழ். தெல்லிப்பழையிலுல்ள  இலங்கை சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன்தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான இருவரும் யாழ். மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

(செல்வநாயகம் ரவிசாந், புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...