நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்; 14 மனுக்களும் 19 இல் விசாரணை | தினகரன்

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்; 14 மனுக்களும் 19 இல் விசாரணை

 

உள்ளூராட்சி சபைத் தேர்தல்  தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களை பரிசீலனை செய்வது இம்மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள், இன்றைய தினம் (16) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, உரிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதை தடை செய்யும் வகையிலான உத்தரவை வழங்குமாறு குறித்த மனுக்களில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, குறித்த விடயத்தை பாதிக்கும் காரணிகளை உறுதிப்படுத்துமாறு, மனுதாரர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது. குறித்த மனுக்களில் ஒரே விதமான விடயங்களைக் கொண்ட மனுக்களை, மூன்று பிரிவுகளாக பிரித்து அவை பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

 


Add new comment

Or log in with...