KKS துறைமுக அபிவிருத்திக்கு இந்திய கடனுதவி | தினகரன்

KKS துறைமுக அபிவிருத்திக்கு இந்திய கடனுதவி

 

காங்கேசன்துறை துறைமுகத்தை, வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான இரு தரப்பு கடனுதவி ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

அந்த வகையில் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்தியாவின் புது டெல்லியில் இடம்பெற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் (Exim Bank) முகாமைத்துவ பணிப்பாளர் டேவிட் ரஸ்கின்ஹா மற்றும் இலங்கை சார்பில் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...