கிளிநொச்சி வட்டக்கச்சி பாலத்தின் கீழ் இளைஞன் சடலமாக மீட்பு | தினகரன்

கிளிநொச்சி வட்டக்கச்சி பாலத்தின் கீழ் இளைஞன் சடலமாக மீட்பு

 

கிளிநொச்சி, வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞர் ஒருவர் இன்று (16) காலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர்  மோட்டார் சைக்கிளில் அதிக வேகத்தில்  சென்று கட்டுப்பாட்டையிழந்து பாலத்தின் கீழ் விழுந்து பலியாகி இருக்கலாம் என, பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞர் தொடர்பில் நீதவான் விசாரணைகள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...