மதுபானம் தொடர்பான இரு வர்த்தமானிகளையும் நீக்க அனுமதி | தினகரன்

மதுபானம் தொடர்பான இரு வர்த்தமானிகளையும் நீக்க அனுமதி

 

மதுபானம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட இரு வர்த்தமானிகளையும் இரத்து செய்வதற்கு அமைச்சரவை ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

மதுபான சாலைகள், மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் மதுபான கொள்வனவு, மதுபான விற்பனை மற்றும் அங்கு பணிபுரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு கடந்த புதன்கிழமை (10) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் மூலமும், மதுபான சாலைகளை திறக்கும் நேரங்களில் திருத்தம் செய்வது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை (11) வெளியிடப்பட்ட மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் மூலமும் வெளியிடப்பட்டிருந்தது.

நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தல்களை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல்களை நீக்குவதற்கு இன்று (16) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 


Add new comment

Or log in with...