Monday, January 15, 2018 - 11:37
எல்.ரி.பி. தெஹிதெனிய |
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
இது வரை காலமும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக, கடமையாற்றி வந்த எல்.ரி.பி. தெஹிதெனிய, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, குறித்த பதவிக்கு பிரீத்தி பத்மன் சுரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி வந்த பிரீத்தி பத்மன் சுரசேன, கடந்த 2016 ஜனவரி 20 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக, நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment