உமாஓயா வேலைத் திட்டத்தினால் பண்டாரவளையில் நிலம் தாழிறக்கம் | தினகரன்

உமாஓயா வேலைத் திட்டத்தினால் பண்டாரவளையில் நிலம் தாழிறக்கம்

உமாஓயா பலநோக்கு வேலைத் திட்டத்தினால் பண்டாரவளைப் பகுதியில் மேலும் மூன்று இடங்களில் நிலம் தாழிறங்கும் நிலை ஏற்பட்டுள்ன. பண்டாரவளைப் பகுதியில் மெதபேருவ என்ற இடத்திலும் ஹீல்ஓய என்ற இடத்திலுள்ள ஆற்றுப் பகுதியிலும், மேட்டு நிலமொன்றிலுமே நிலம் தாழிறங்கியுள்ளன. நிலம் தாழிறங்கிய பகுதியில் நீர் நிரம்பியிருப்பதையும், நீர் பூமிக்கடியில் செல்வதையும் இப்படத்தில் காணலாம்.

20 அடி, 18 அடி, 15 அடி என்ற வகையில் நிலம் தாழிறங்கியுள்ளன. நிலம் சரிதவியல், கட்டிடத் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இந் நிலம் தாழிறங்கியமை குறித்து தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

பதுளை தினகரன் விசேட நிருபர் 


Add new comment

Or log in with...