ஊழல் செய்ததை உறுதி செய்தால் எம்.பி பதவியை இராஜினாமா செய்வேன் | தினகரன்

ஊழல் செய்ததை உறுதி செய்தால் எம்.பி பதவியை இராஜினாமா செய்வேன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருடியதாகவோ ஊழல் செய்ததாகவோ உறுதி செய்யப்பட்டால் என்னுடைய இரண்டு அமைச்சுப் பதவிகள் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அனைத்தையும் விட்டு விட்டு வீட்டுக்கு செல்வேன். இவ்வாறு நீதி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார். காவத்தை மாதம்பை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், திருட்டுப் புத்தி உள்ளவர்கள் தான் பதவிக்கு வர முயற்சிக்கிறார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை திருடனாக ஊடகங்களில் சித்தரிக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.

அன்று பிரதமர் ஊழல் செய்தமையை முடியுமானால் உறுதி செய்யட்டும். தலதா அத்துகோரள நீதிபதிகளின் விடயங்களில் தலையிடுவதாக சொல்வதாக கேள்விப்பட்டேன். பகுத்தறிவில்லாத ஜென்மங்களே அவ்வாறு சொல்கிறார்கள்.

ஆனால் நீதிபதிகளின் தீர்ப்புக்களில் தலையிட்டவர்கள் யாரென்பதை இந்நாட்டு மக்கள் தங்களுக்கு பொருத்தமில்லாத தீர்ப்பினை வழங்கவில்லை என்பதற்காக நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்பி பழிதீர்த்தவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே இனியும் இவ்வாறாக நாட்டை நாசப்படுத்தியவர்களை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

 (இரத்தினபுரி சுழற்சி நிருபர்) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...