4 துப்பாக்கிகள், 148 ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது | தினகரன்


4 துப்பாக்கிகள், 148 ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது

 

இரண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 148 ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காலி, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடைப்படையின், திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று (14) அதிகாலை 4.00 மணியளவில் வைத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆயுதங்களுடன் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இலச்சினை கொண்ட, LTTE யினால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பிலான ஆங்கிலம், தமிழ் மொழியில் எழுத்தப்பட்ட புத்தகம் ஒன்றும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

 1. ஜே.ஆர் வகை கைக்குண்டு - 01
 2. உள்நாட்டு தயாரிப்பு 9மி.மீ. கைத்துப்பாக்கி - 01
 3. வெளிநாட்டு தயாரிப்பு 22 மி.மீ. வகை ரவை பயன்படுத்தப்படும் துப்பாக்கி - 01, (அதற்கான பாகம்)
 4. உள்நாட்டு தயாரிப்பு 12 துளை 03 ரவை பயன்படுத்தும் துப்பாக்கி - 01
 5. அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி - 01
 6. ரி56 வகை ரவை மெகசின்  - 01
 7. எஸ்.ஜீ வகை கறுப்பு, வெள்ளை, சிவப்பு 12 துளை தோட்டாக்கள் - 03
 8. 7.62 x 39 வகை தோட்டாக்கள் - 100
 9. 45 மி.மீ. தோட்டாக்கள் - 03
 10. 7.62 x 25 மி.மீ. வகை தோட்டாக்கள் - 03
 11. 9 மி.மீ. ரவை - 31
 12. அடையாளம் காணப்படாத பல்வேறு தோட்டாக்கள் - 08
 13. ஆயுத பயன்பாடு தொடர்பான புத்தகம் - 01
 14. கையடக்க தொலைபேசி - 04

கைது செய்யப்பட்ட நபர், கரந்தெனிய, மடகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த, சுச்சீ என அழைக்கப்படும் டொனன் குமார ரணவீர எனும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த நபரை நாளைய தினம் (15) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரந்தெனிய பொலிசார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...