அம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட நிதியும் கிடைத்துள்ளது | தினகரன்

அம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட நிதியும் கிடைத்துள்ளது

 

அம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாவது கட்ட நிதி 97.3 மில்லியன் அமெரிக்க டொலர் சீனாவினால் இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், இனால் குறித்த நிதி, இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கியுள்ளது.

சீன - இலஙகை ஒன்றிணைந்த அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு அமைய அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் Hambantota International Port Group Pvt Ltd (HIPG), Hambantota International Port Services Company Pvt Ltd (HIPS) ஆகிய நிறுவனங்களிடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறைகளின் ஒன்றிணைந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 292 மில்லியன் அமெரிக்க டொலர்களை, சைனா மெர்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவனம் (China Merchants Port Holdings Company Limited) கடந்த மாதம் இலங்கையின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...