இரு ரிப்பர் வாகனங்கள் மோதி விபத்து; சாரதியொருவர் பலி | தினகரன்

இரு ரிப்பர் வாகனங்கள் மோதி விபத்து; சாரதியொருவர் பலி

 

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற ரிப்பர் ரக வாகன விபத்தில் சாரதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

மாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த மணல் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னாள் சென்றுகொண்டிருந்த  ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தப்பட்டமையால் பின்னால் மணல் ஏற்றி சென்ற மற்றய ரிப்பர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது..

குறித்த சாரதியின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன்)
 


Add new comment

Or log in with...