உலகக்கிண்ண கால்பந்து: இங்கிலாந்து அணி நைஜீரியா, கொஸ்டாரிகா அணிளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதல் | தினகரன்

உலகக்கிண்ண கால்பந்து: இங்கிலாந்து அணி நைஜீரியா, கொஸ்டாரிகா அணிளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதல்

உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு தயாராகும் வகையில் நைஜீரியா, கோஸ்டாரிகாவிற்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட இங்கிலாந்து அணி திட்டமிட்டுள்ளது

ரஷ்யாவில் ஜூன் 14-ம் திகதி முதல் ஜூலை 15-ம் திகதி வரை உலகக்கிண்ண கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி இடம்பிடித்துள்ள குழுவில் துனிசியா, பனாமா, பெல்ஜியம் அணிகள் இடம்பிடித்துள்ளன.

ரஷ்யாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட இங்கிலாந்து முடிவு செய்திருந்தது.

துரதிருஷ்டவசமாக இத்தாலியும், நெதர்லாந்தும் உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெறவில்லை.

இதனால் இங்கிலாந்து அணி நைஜீரியா, கொஸ்டாரிகா அணிகளுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்துள்ளது. ரஷ்யாவிற்கு செல்வதற்கு முன் ஜூன் 2-ம் திகதி நைஜீரியாவுடன் புகழ்பெற்ற விம்ளே மைதானத்தில் விளையாடுகிறது. கொஸ்டாரிகா உடன் ஐந்து நாட்கள் கழித்து விளையாடுகிறது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பிரேசில் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை இங்கிலாந்து 0-−0 என டிரா செய்திருந்தது. 


Add new comment

Or log in with...