2 ஆவது புட்சால் விளையாட்டு போட்டியில் 10 மேமன் அணிகள் பங்கேற்பு | தினகரன்

2 ஆவது புட்சால் விளையாட்டு போட்டியில் 10 மேமன் அணிகள் பங்கேற்பு

ஃபுட்சால் உலக உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிறன்று (14) முற்பகல் எட்டுமணி தொடக்கம் இரண்டாவது தடவையாகவும் நடைபெறவுள்ள ஃபுட்சால் சுற்றுப் போட்டியில் மேமன் சமூகத்தின் பத்து அணிகள் மோதவுள்ளன.

கடந்த செவ்வாயன்று ஒருகொடவத்தை எக்ஸ்போ லங்கா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற திறந்த சீட்டிழுப்பின்போது, நடப்பு வருட சம்பியன் ஃபுட்சால் அமிகோஸ் அணியும் கடந்த வருடம் இரண்டாம் இடத்தை பிடித்திருந்த 8 கென்டெயினேர்ஸ் அணியும் துரதிஷ்டவசமாக ஒரே குழுவில் இம்முறை இடம்பிடித்துள்ளன.

இந்த இரண்டு அணிகளுடனும் கட்ரா உதைபந்தாட்டக் சீகேர் ஆர் உதைபந்தாட்டக் கழகம் மற்றும் யுனைடெட் சிக்கேர்ஸ் அணிகளும் குழு ஏ பிரிவில் களமிறங்கவுள்ளன. அதேவேளை, ஜொலி போய்ஸ், ஃபிளமிங்கோ உதைபந்தாட்ட எம். போய்ஸ், ரெனிகேட்ஸ் மற்றும் கண்ணேர்ஸ் உதைபந்தாட்ட கழகம் ஆகிய அணிகள் குழு ‘ஆ. பிரிவில் இடம்பிடித்துள்ளன.

மேற்படி சுற்றுப் போட்டி ‘லீக்’ அடிப்படையில் நடாத்தப்படவுள்ளதுடன், ‘லீக்’ கட்டத்தின் முடிவில் முதல் இரண்டு அணிகள் கிண்ணத்திற்கான அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதுடன், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களுக்கு வரும் அணிகள் Plate சம்பியன்ஷிப் பட்டத்திற்கென மோதவுள்ளன.

கிண்ணத்தை வென்றெடுக்கும் அணிக்கு வெற்றிக கிண்ணத்துடன் 50,000/= பணப் பரிசொன்றும் இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 30,000/= பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் அணிகளுக்கு முறையே 25,000/= மற்றும் 15000/= பணப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன, சிறந்த அணி சீருடைக்கு 10,000/= பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த விளையாட்டு வீரர மற்றும் பந்துக் காப்பாளர் (கோல் கீப்பர்) ஆகியோருக்கும் விசேட வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்படவுள்ளன. நான்கு அணிகள் மோதவுள்ள மேமன் சமூகத்தின் கனிஷ்ட வீரர்களுக்கான சுற்றுப் போட்டியும் நடைபெறவுள்ளது.

கில்லர் கீளீட்ஸ், மேமன் நைட் ட்ரைடேர்ஸ், ‘செவன் புட்டீஸ் மற்றும் யுனைடெட் செவன்ஸ ஆகிய அணிகள் ரவுண்ட் ரொபின் அடிப்படையில் விளையாடவுள்ளதுடன் முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

கொழும்பு உதைபந்தாட்டக் கழகத் தலைவரும் இலங்கையில் உதைபந்தாட்டத்தை ஊக்குவித்து வருபவருமான சைப் யூசுப் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றுகையில், மேமன் சமூக இளையோரிடையே இந்தச் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்தமைக்காக ஷிபானுக்கு நன்றி தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எமது சமூகம் சிறியதொன்றாக உள்ளபோதிலும், இலங்கையில் அதிகம் பிரசித்திபெற்றதாகும். எமது இனம் மொழி, எமது கலாசாரம், வரலாறு, சமயம் ஆகியவற்றையும் அது எங்கிருந்து வந்ததென்பது பற்றி நாம் அடையாளங்கண்டு வருகின்றோம். நாம் சிறியதோர் சமூகமாக இருக்கின்றபோதிலும் அதனைக் காட்சிப்படுத்துவதற்கென பத்து சிறந்த அணிகளைக் கொண்டவர்களாக இருக்கின்றோம். புட்சாலில் விளையாடுவதற்கென அதே சமூகத்திலிருந்து பத்து அணிகளைக் கொண்டிருப்பதனையிட்டு நான் அளவற்ற பெருமையடைவதுடன் அதில் அங்கம் வகிப்பதிலும் மகிழ்ச்சியடைகின்றேன் அத்துடன், எதிர்காலத்திலும் தொடர்ந்தும் எனது ஆதரவை வழங்குவேன் எனவும் உறுதியளிக்கின்றேன் என்றார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...