ஓட்டமாவடி பஸார் பள்ளி வீதியில் யானை அட்டகாசம் | தினகரன்

ஓட்டமாவடி பஸார் பள்ளி வீதியில் யானை அட்டகாசம்

 

ஓட்டமாவடி பஸார் பள்ளி வீதியிலுள்ள ஒருவரின் வீட்டின் வளவினுள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த யானைகள் தோட்டத்தினை சேதப்படுத்தியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் மு.மீராமுகைதீன் தெரிவித்தார்.

வாகனேரி காட்டுப் பகுதியில் இருந்து காவத்தமுனை ஊடாக ஆற்றைக் கடந்து ஓட்டமாவடி பகுதிக்கு நேற்று அதிகாலை மூன்று மணியளவில் யானைகள் கூட்டமாக வந்தது.

அதில் இரண்டு யானைகள் குறித்த நபரின் வளவினுள் வந்து வாழை மரங்கள், தென்னை மரங்கள், வற்றாளைக் கொடி போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது சேதப்படுத்தும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்கும் போது யானைகள் அட்டகாசம் செய்து கொண்டு வீடு நோக்கி வருகை தந்த போது அயலவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் இரண்டு யானைகளையும் துரத்தி விட்டோம் என வீட்டின் உரிமையாளர் மு.மீராமுகைதீன் மேலும் தெரிவித்தார்.

கல்குடா தினகரன் நிருபர்

 


Add new comment

Or log in with...