இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து | தினகரன்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: ‘‘பிஎஸ்எல்வி-சி ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் மூலம் புத்தாண்டில் விண்வெளி ஆய்வின் பயன்கள் நமது குடிமக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு சென்றடையட்டும்.

இஸ்ரோவின் 100வது செயற்கைகோள் ஏவப்பட்டது, நமது புகழுக்கும் சாதனைக்கும், இந்தியாவின் எதிர்கால விண்வெளி ஆய்வு திட்ட பணிகளுக்கும் முக்கியத்துவமாக அமைந்துள்ளது.

நமது வெற்றியில், மற்ற நாடுகளுக்கும் பயன் கிடைத்துள்ளது 6 நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைகோள்கள் உட்பட 31 செயற்கைகோள்கள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன’’ எனக்கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...