ஜெயாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் விசாரணை ஆணையத்தில் | தினகரன்

ஜெயாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் விசாரணை ஆணையத்தில்

 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை அப்பலோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

முன்னதாக ஜெயலலிதாவுக்கு 75 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முழுவிவரங்களை விசாரணை ஆணையம், அப்பலோ நிர்வாகத்திடம் கேட்டிருந்தது.

இந்தநிலையில் 75 நாட்களாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழுமையான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் அப்பலோ நிர்வாகம் சமர்பித்தது. 2 சூட்கேஸில் ஆவணங்களைக் கொண்டு வந்து அப்பலோ நிர்வாகம் சமர்பித்தது. இதற்கிடையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். 


Add new comment

Or log in with...