துனீஷியாவில் 3 இரவுகளாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் | தினகரன்

துனீஷியாவில் 3 இரவுகளாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு துனீஷியாவில் மூன்றாவது இரவாகவும் நாடெங்கும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அடிப்படை பொருட்களுக்கான விலையேற்றத்திற்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனை கிளர்ச்சி நடவடிக்கை என கண்டித்திருக்கும் பிரதமர் யூசப் சஹத், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டை பலவீனப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை 240 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்திருப்பதோடு 49 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் துனீஷ் உட்பட குறைந்தது 10 இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஒரு சில தினங்களால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் அமைதியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமையாகும்போது வன்முறையாக மாறியது.

அரசின் 2018 வரவு செலவு திட்டத்தை கைவிடக் கோரும் ஆரப்பாட்டக்காரர்கள் வறிய குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கவும் வலியுறுத்துகின்றனர்.

2011 ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான அரபு வசந்த போராட்டம் ஆரம்பமான துனீஷியாவில் அந்த போராட்டம் நாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த செயின் அல் அப்தீன் பென் அலியின் ஆட்சியை கவிழ்த்தது. அது தொடக்கம் துனீஷியா பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகிறது. 


Add new comment

Or log in with...