பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை: டிரம்ப் மனமாற்றம் | தினகரன்

பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை: டிரம்ப் மனமாற்றம்

 

அமெரிக்காவை இன்னும் நியாயமாக நடத்தினால், 2015 பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் மீண்டும் இணைந்துகொள்ளத் தயார் என, ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். அது அமெரிக்காவுக்குப் பாதகமான உடன்பாடு என்ற கருத்தை மீண்டும் அவர் வலியுறுத்தினார்.

முன்னைய ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் கையெழுத்திட்ட பாரிஸ் உடன்பாடு மோசமானது என்பதால் தான் அதில் தமக்கு உடன்பாடு இல்லையே தவிர, பாரிஸ் உடன்பாட்டின் மீது தமக்குப் பிரச்சினை ஏதுமில்லை என்றார் அவர்.

“தூய்மையான தண்ணீர், தூய்மையான காற்று” இரண்டுக்கும் தமது நிர்வாகம் கடப்பாடு கொண்டுள்ளதாகத் டிரம்ப் கூறினார். அதே நேரத்தில், அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் போட்டித்தன்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிரம்ப் அறிவித்தார். 


Add new comment

Or log in with...