விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு தாக்கல் | தினகரன்

விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு தாக்கல்

 

முறைகேடாக சொத்து சேகரித்ததாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எம்.பிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று குற்றப் பத்திரம் கையளித்தது. நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான அவரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிபதி விகும் கலுஆரச்சி அனுமதி வழங்கினார்.

2009 ஜனவரி முதல் 2014 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் வருமானத்திற்கு மேலதிகமாக 75 இலட்சம் ரூபா நிதி மற்றும் சொத்துகளை வைத்திருந்தது தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு இவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது.இந்த வழக்கு நேற்று மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆரச்சியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.நீதிமன்ற அழைப்பாணையின் பிரகாரம் விமல் வீரவன்ச எம்.பி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன் போது இலஞ்ச ஊழல் திணைக்களம் வழக்கை நிரூபிப்பதற்காக 32 சாட்சிகளையும் 40 சாட்சிப் பொருட்களையும் முன்வைத்திருந்தது. மேலதிக வழக்கு விசாரணை பெப்ரவரி 19 ஆம் திகதி நடைபெறும். (பா) 


Add new comment

Or log in with...