மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பெற்றது என்ன?: மு.க ஸ்டாலின்−முதல்வர் விவாதம் | தினகரன்

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பெற்றது என்ன?: மு.க ஸ்டாலின்−முதல்வர் விவாதம்

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்து வரகிறது. இந்த விவாதத்தில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக ஆளுநர் உரையில் மத்திய அரசு, தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்தான தகவல்களை இல்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழக அரசு மத்திய அரசுக்கு நன்றிக்கடன் பற்றுள்ளதோ என்று எண்ணும் வகையில் ஆளுநர் உரையில், மத்திய அரசுக்கு அத்தனை நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாக கூறும் நீங்கள் (அரசு), இதுவரை பெற்ற நிதி என்ன என்று கேட்டார்.

2015 மழை வெள்ளம், வர்தா புயல் நிவாரண நிதி என்று நீங்கள் கேட்ட நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளீர்களா?, மாநில அரசு கேட்டதை மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதையே ஆளுநரின் உரை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை, எவ்வளவு நிதியை பெற முடியுமோ அதை போராடி பெற்று வருகிறோம் என்று கூறினார். 


Add new comment

Or log in with...