கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள் | தினகரன்

கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்

பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் வைரமுத்து மீது பொலிசில் பலர் புகார் அளித்து வருகின்றனர்.

சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநாடு ஒன்றில் தி.மு.கவைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி. கனிமொழி ''திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை'' என பேசியுள்ளார்.

அதேபோல சினிமா பாடலாசிரியர் வைரமுத்து திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது; வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்து முன்னணி நிர்வாகி முருகேசன் என்பவர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் 'பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக பேசி இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ள வைரமுத்து மற்றும் கனிமொழி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பலரும் புகார் அளித்து உள்ளனர்.


Add new comment

Or log in with...